எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்ரிபால சிறிசேன என்ற மூன்று பேரில் இருந்து ஒருவரை தெரிவுசெய்யவேண்டும் என்ற நிலை தற்போது நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எனினும் வாக்காளர்களின் விருப்பத்துக்கு ஏற்றவகையில் புதிய ஒருவரை களத்தில் இறக்கவேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்றில் இது தொடர்பில் பேராசிரியர் குமார் டேவிட் கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார்.
அதில், இந்த மூவரும் பயனற்றவர்கள் என்பதை விட மோசம் என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச- போர்க்குற்றவாளி, வெள்ளைவேன் ரசிகர் மற்றும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஆபத்தானவர் என்று குற்றம் சுமத்தப்படுகிறார்.
அதாவது கோட்டா இருதயம் அற்றவர் என்று கருதப்படுகிறார்.
ரணில் விக்கிரமசிங்க- நெருப்பின் மீது நடந்துசெல்லும் நிலைக்கு உள்ளாகியுள்ளார். அவர் நம்பிக்கையில்லாதவராக உள்ளார்.
மூன்றாவதாக மைத்ரிபால சிறிசேன- நிச்சயமற்றவராக கருதப்படுகிறார்.
இந்தநிலையில் யார் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மக்கள்; பல கஸ்டங்களைக் எதிர்நோக்கவேண்டியிருக்கும் என்றும் பேராசிரியர் குமார் டேவிட் எதிர்வுகூறியுள்ளார்.
எனவே வெற்றி என்பதைக்காட்டிலும் இடதுசரிகள், தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஜேவிபியும் இணைந்த ஒரு புதியக்கூட்டணி உருவாக்கப்பட்டு புதிய வேட்பாளர் போட்டியிட்டால் அது எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என்றும் பேராசிரியர் குமார் டேவிட் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க