கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளார்.
அதற்கிணங்க பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1042 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அத்தோடு குறித்த வேட்பாளர்கள் தொடர்பில் சட்ட மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையில் தேர்தல் தொகுதிகளுக்குரிய பொலிஸ் பிரிவு,வலய குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகளை எடுக்குமாறும் பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க