பயங்கரவாத தடுப்பு சட்டத்தை, அரசாங்கம் பாதுகாப்பு படையினரின் மனவலிமையை வீழ்த்துவதற்காக பயன்படுத்துகிறது என்று குற்றம் சுமத்தப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்தக்குற்றச்சாட்டை இன்று முன்வைத்துள்ளார்.
இலங்கையில் போர்முடிவுக்கு கொண்ட வரப்பட்ட 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இந்தக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
புலனாய்வு சேவைகளின் உறுப்பினர்கள் பயங்கரவாத தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒரு பயங்கரவாத தடுப்புச்சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நியதி.
இந்தநிலையில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் இறுதிக்கட்டத்தின் போது படையினர் எந்தப்போர்க் குற்றங்களையும் செய்யவில்லை என்பதை தாம் பகிரங்கமாக அறிவிப்பதாக அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய பிரிவினைவாத பயங்கரவாதம் 2019 ம் ஆண்டு மே மாதம் 19 ம் திகதி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
1970 ல் இருந்து மிகவும் சக்திவாய்ந்த பயங்கரவாத இயக்கமாக செயற்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கம், தற்கொலை தாக்குதல்கள், வேகப் படகுகள், இரவு நேரத்தில் வானூர்தி; தாக்குதல்கள் போன்றவற்றை நடத்தியது.
சட்டவிரோதமாகவும் நிதி சேகரித்து உலகில் உள்ள அனைத்து பயங்கரவாத இயக்கங்களுக்கும் அது முன்னோடியாக இருந்தது.
சர்வதேச ரீதியாக ஆயுதங்களைக் கொண்டு செல்லும் கப்பல்களையும் அந்த இயக்கம்; கொண்டிருந்தது.
விடுதலைப் புலிகளை எதிர்த்து போராடுவதற்கு இலங்கை அரசாங்கம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தது.
ஆனால் இலங்கை இராணுவத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் எதிராக போராட சர்வதேச சந்தையில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்தனர்.
இரண்டு உலகத் தலைவர்களை படுகொலை செய்த உலகில் பயங்கரவாத அமைப்பு விடுதலைப்புலிகள் அமைப்பாகும்.
இந்தியாவின் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கையின் ஜனாதிபதி பிரேமதாஸ. ஆகியோரை அந்த இயக்கம் கொலைசெய்தது.
இந்தநிலையில போரில் படையினர் பெற்ற வெற்றி எளிதாக பெற்ற வெற்றி அல்ல.
இதன்போது 25,367 படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
பல நூற்றுக்கணக்கான சாதாரண காவல்துறையினர், ஆயிரக்கணக்கான சிங்களவர்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் மற்றும் பல அரசியல் தலைவர்களும் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில் சில நாடுகள் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தபோதும் இலங்கையின் படையினர் போரில் வெற்றி பெற்றனர்.
இதன்போது சீனாவின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்;டமை சிலருக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம்
ந்த நேரத்தில் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி நிர்வாகம், இலங்கைக்கு உதவியது.
பயங்கரவாதத்தை அண்மையில் முற்றிலுமாக தோற்கடித்த உலகின் சமீபத்திய வரலாற்றில் இலங்கையும் அடங்கும்.
இதேவேளை 2009ஆம் ஆண்டு ஜனவரி 9 இல்வெளிநாட்டு சக்திகளின் இசைக்கு நடனம் ஆடும் ஒரு அரசாங்கம் இந்த நாட்டில் அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
;ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அவர்கள் நடைமுறைப்படுத்தத் தொடங்கிய நிகழ்ச்சி நிரல் மூலம் முழு உலகத்தையும் வியப்பில் ஆழ்த்திய ஆயுதப்படைகளைத் துன்புறுத்த ஆரம்பித்தனர்.
2015 இல், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் புலனாய்வாளர்கள் பங்குபற்றலுடன், இலங்கை படையினரை விசாரிக்க போர்க்குற்ற நீதிமன்றத்தை நிறுவுவதற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழங்கிய ஒப்புதலுக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது.
இதன்படி போர்க் குற்றங்களை செய்ததாக சந்தேகிக்கப்படும் சகல இராணுவத்தினரை நிர்வாக வழிமுறையினூடாக சேவையிலிருந்து நீக்கப்படவும் இலங்கை அரசாங்க தரப்பினர் உடன்பட்டனர்.
காணாமல் போனோர் அலுவலகம் விசாரணைகளை நடத்தி அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடுகிறது.
அந்த அறிக்கைகள் அடிப்படையில் இலங்கையின்; ஆயுதப்படைகளின் உறுப்பினர்களுக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
எமது ஆயுதமேந்திய வீரர்கள் யுத்த வீரர்கள். மாறாக கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் மற்றும் திருடர்கள் அல்ல,
இந்தநிலையில் அமரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொண்ட ஆயுதமோதல் சட்டப்படி இலங்கையின் படையினர் எவ்வித போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க