இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தலொன்று நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க குறித்த வர்த்தமானி அறிவித்தலில் வறிய குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட 8,5000 ரூபாய் 10,000 ரூபாவாகவும் மிகவும் வறிய குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட 15,000 ரூபாய் 17,500 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க