கடந்த 21ம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான மருத்துவ கப்பலை நேற்று (டிசம்பர் 24) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டிருந்தார்.
இதன்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய குறித்த மருத்துவ கப்பல் உள்ளடங்கியுள்ள நிகழ்ச்சித்திட்டத்தின் மனிதாபிமான முயற்சிகள் தொடர்பில் சீன அரசாங்கத்திற்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த கப்பல் எதிர்வரும் டிசம்பர் 27ம் திகதி வரை இலங்கை மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்கிடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க