உறுதியளித்தப்படி இலங்கை அரசாங்கம், சர்வதேச மற்றும் உள்ளுர் பொறிமுறைகளை கையாண்டு பொறுப்புக்கூறலை நிறைவேற்றவேண்டும் என்ற கனடா கோரியுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10வது நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடா விடுத்துள்ள செய்தியில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2009ஆம் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
பலர் அகதிகளாக்கப்பட்டனர்.
அந்தக்காயங்கள் இன்னும் ஆறவில்லை.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதிக்கிடைக்கச் செய்யவேண்டும்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை அது நிறைவேற்றவேண்டும்.
இதற்கு கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் தமது ஆதரவை வழங்கும் என்றும் கனேடிய பிரதமர் தெரிவி;த்துள்ளார்.
இதேவேளை போரால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க