இலங்கையில் அமரிக்காவின் பாதுகாப்பு பிரசன்னம் தொடர்பில் சீனா அதிருப்திடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாகவே ஜனாதிபதி மைத்ரிபாலவை, சீன ஜனாதிபதி சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து அமரிக்காவும் பிரித்தானியாவும் பாதுகாப்பு விடயங்களில் இலங்கைக்கு உதவின.
அமரிக்க விசாரணையாளர்களும் பிரித்தானிய விசாரணையாளர்களும் இலங்கை வந்தனர்.
இது சீனாவுக்கு பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பில் சீனாவின் தூதுவர் இலங்கையின் ஜனாதிபதியை சந்தித்து தமது நாட்டின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தினார்.
அத்துடன், சீன ஜனாதிபதி மைத்ரியை சந்திக்க விரும்புவதாகவும் அழைப்பு விடுத்தார்
இதற்கிடையில் இலங்கைக்கு சீனாவினால் காவல்துறை வாகனங்களும் அன்பளிக்காக வழங்கப்பட்டன.
இந்தநிலையில் மாநாடு நிமித்தம் சீனாவுக்கு சென்ற மைத்ரியை, சீன ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு குறித்து தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு பாதுகாப்பு நிமித்தம் 2600 மில்லியன் ரூபாய்களை வழங்க சீன ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார்.
குறித்த மாநாட்டுக்காக சீனாவுக்கு சென்ற பல்வேறு நாடுகளின் ஜனாதிபதிகளுக்குள் இலங்கை ஜனாதிபதியை மாத்திரமே சீன ஜனாதிபதி சந்தித்தமை சீனாவின் நிலைப்பாட்டை உறுதிசெய்துள்ளது.
கருத்து தெரிவிக்க