இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பாடசாலை சீருடைகளை வழங்கிய சீன அரசாங்கம்

நேற்று (டிசம்பர் 10) இலங்கைக்கு  சீன அரசாங்கத்திடமிருந்து மானியமாக பெறப்பட்ட பாடசாலை சீருடைகள் கையளிக்கப்பட்டிருந்தன.

அதற்கிணங்க குறித்த சீருடைகளை கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் சீன தூதுவர் கி ஜான் ஹொங் கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைத்து கையளித்திருந்தார்.

அத்தோடு 2025ம் ஆண்டிற்கான இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளினதும் பிள்ளைகள் மற்றும் ஊழியர்களுக்கான சீருடைகளை வழங்கிய சீன அரசாங்கத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய நன்றி தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க