வவுனியா நகரசபை செயலாளரால் வவுனியா நடைபாதை வியாபாரங்களில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க வவுனியா நகரில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறான வகையில் காணப்படும் நடைபாதை வியாபார நிலையங்களை எதிர்வரும் டிசம்பர் 10ம் திகதிக்கு முன் அகற்றுமாறு வவுனியா நகரசபை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் குறித்த தினத்தில் அகற்றப்படாத நடைபாதை வியாபார நிலையங்களை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் வவுனியா நகரசபை செயலாளர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க