நேற்று (டிசம்பர் 06) இலங்கையின் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவிச் செயலாளர் டொனால்ட் லு தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டிருந்தாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க குறித்த பதிவில் இலங்கையின் ஜனநாயக ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவு வழங்குமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க