கட்டுரைகள்

தகவல் அறியும் உரிமைச்சட்டம்.

இலங்கை போன்ற நாடுகளில் ஜனநாயகத்தில் மக்களின் பங்களிப்பு என்ன? என்ற கேள்விக்கு மக்கள் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தனது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றனர்,
அவ்வாறு தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் தமக்காக குரல் கொடுப்பர் அல்லது அவர்களுக்கான சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது ஜனநாயகக் கோட்பாடு.
எனினும் இலங்கையில் அவ்வாறு நிகழ்வதில்லை.
குறிப்பாக மலையகத்தில் இதனை சாதாரணமாக கண்டுகொள்ளமுடியும்.
வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள்,அரசியல் அதிகாரம் கிடைக்கப்பெற்றதும் அதிகாரத்தை தங்கள் சுயநலன்களுக்காக துஸ்பிரயோகம் செய்கின்றனர்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மக்களை ஒரு பொருட்டாக கருதாமல் செயற்படுகின்றனர்.
இதுவே பொதுமக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்தநிலையில் மக்கள் நேரடியாக அரசாங்கத்தின் செய்ற்பாடுகளை கண்காணிக்கவும், அரசாங்கம், மற்றும் அதிகாரிகளின் செயற்பாடுகளை கேள்வி கேட்பதற்கும் நேரடியாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் செயற்திறன் மிக்க விதத்தில் பங்கேற்கவும் 2016ம் ஆண்டு 12ம் இலக்க தகவல் அறியும் உரிமைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
அரசாங்கத்தினதும் பொது அமைப்புகளதும் தீர்மானங்கள் பொதுமக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன,
எனவே அந்த தீர்மானங்கள் தொடர்பில் தகவல்களை அறிந்துக்கொள்ள பொதுமக்களுக்கு உரிமையுள்ளது. இதற்காகவே இந்த தகவல் அறியும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு அமைவாக இலங்கை நாட்டில் வசிக்கும் பொதுமகன், என்பதை உறுதிப்படுத்தக் கூடிய எந்தவொரு தனிநபரும் அரசாங்கத்திடம் அல்லது பொது நிறுவனங்களிடம் இருந்து தமக்கு தேவையான தகவல்களை ஒரு விண்ணப்பத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்,
மலையக மக்கள், தமது பணிக்கொடுப்பனவுகள்( ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சமுர்தி) உரிமைகள், மற்றும் முக்கிய தகவல்கள் தொடர்பில் மூன்றாவது ஆள் ஒருவரின் உதவியின்றி நேரடியாகவே தகவல்களை பெற்றுக்கொள்ளமுடிகிறது.
அதற்கமைய அரசாங்கம் அல்லது பொது நிறுவனமொன்றிலிருந்து தகவல்களைப் பெற வேண்டுமாயின் பின்வரும் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்,
தகவல் அவசியப்படும் பொதுநிறுவனத்திற்கு சென்று அங்கு சேவையில் அமர்த்தப்பட்டுள்ள தகவல் அதிகாரி, அல்லது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் யாதேனும் ஒரு பணியாளர் மூலம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொள்ளவேண்டும்.
பின்னர் அதில் கோரப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து, தகவல் அதிகாரியிடம் சமர்ப்பித்து, குறித்த ஆவணம் கையளிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் கடிதத்தினை பெற்றுக்கொள்ளவேண்டும்.
அல்லது குறித்த படிவத்தினை hவவிள:ஃஃறறற.சவi.பழஎ.டமஃ என்னும் அரசாங்கத்தின் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து விண்ணப்படிவத்தை தரவிறக்கம் செய்து படிவத்தை பூர்த்தி செய்து நேரடியாகவோ பதிவுத்தபால் மூலமாகவோ உரிய நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பப்படிவமானது அனுப்பபட்டு 14 வேலை நாட்களுக்குள் விண்ணப்பத்தாரிக்கு சாத்தியமான தகவல்கள் எழுத்து மூலம் வழங்கப்படல் வேண்டும்
அவ்வாறு வழங்கப்படாதவிடத்து தகவல் மறுக்கப்படுவதற்கான காரணம் குறிப்பிடப்பட வேண்டும்,
தகவலானது, தகவல் அறியும் உரிமைச்சட்டத்திற்கு முரணாக மறுக்கப்படும் எனில் குறித்த தகவல் அதிகாரிக்கு எதிராக மனுவொன்றை மீண்டும் சமர்ப்பிக்க முடியும்
அந்த மனுவைப் பெற்றுக்கொள்ளும் தகவல் அதிகாரி அல்லது பதில் வழங்கவேண்டிய அதிகாரி 14 அல்லது 21 வேலை நாட்களுக்குள் விண்ணப்பத்தாரிக்கு பதிலை எழுத்து  மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
அவ்வாறு  14 அல்லது 21 வேலை நாட்களுக்குள் விண்ணப்பத்தாரிக்கு தகவல் எழுத்து மூலமாக அனுப்பபடவில்லை அல்லது அனுப்பட்ட தகவல் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என விண்ணப்பத்தாரி, கருதினால் அவர், தகவல் அறியும் உரிமைச்சட்டத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள தகவல் ஆணைக்குழுவில் மேன் முறையீடு செய்ய முடியும்.
ஆணைக்குழு அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வி;ண்ணப்பத்தாரிக்கு ஒரு பதிலை அல்லது அறிக்கையை வழங்கும் அந்த விசாரணையிலும் விண்ணப்பத்தாரி, திருப்தி அடையாத பட்சத்தில் விண்ணப்பத்தாரி,  நீதிமன்றத்தை நாட முடியும்.
1994ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட முயற்சிக்கப்பட்ட இந்த சட்டம், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளின் பின்னரே சாத்தியம் அடைந்துள்ளது.
எனவே, தகவல் உரிமைச்சட்டத்தினைக் பயன்படுத்தி துருபிடித்துள்ள ஜனநாயகத்தை சுத்தம் செய்யுங்கள்.
மலையக மக்கள் இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தேவைப்படின் “ஊடகன்” தலைமையகத்துடன் தொடர்புக்கொள்ளுங்கள்
“ஊடகன்” அஞ்சல் பெட்டி இலக்கம் 37, கல்கிஸ்ஸை.

கருத்து தெரிவிக்க