உள்நாட்டு செய்திகள்

முள்ளிவாய்க்காலில் ‘உயிர் வலித்த கணம்’

இறுதிக்கப்பட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் குண்டு மழைபொழிய – பச்சிளம் குழந்தைகள் முதல் கரு சுமந்திருந்த தாய்மார்வரை பலர் கொல்லப்பட்டனர்.

கொத்தணிக் குண்டுகளின் கோரத்தாண்டவத்தால் செத்துமடிந்த தாயை தேடிச்சென்று  பிஞ்சு வாயால் அவளின் மார்பங்களை கௌவி- பாலுக்கு பதில் இரத்தத்தை உறிஞ்சிக்குடித்த எட்டு மாதங்களேயான அந்த குழந்தையை உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கின்றது?

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது சிறுமியொருவரே ஒற்றைக் கையால் ஈகைச்சுடரை ஏற்றிவைத்து, நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். பெயர் ராகினி. கடந்த வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்திருந்தார்.

அன்று (2009) தனது தாய் உயிரிழந்துவிட்டார் என்றுகூட அறியாது, கோரப் பசிக்கு பாலை இரையாக தேடிய பச்சிளம் குழந்தையே இன்று ( 2019) ஈகைச்சுடரை ஏற்றிய ராகினி என அறிந்ததும், பலர் கதறி அழுத்தனர்.

 

கருத்து தெரிவிக்க