அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை, சீனாவுக்கு விற்பனை செய்த உளவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினீயாவில் உள்ள லீஸ்பர்க் நகரை சேர்ந்தவர் கெவின் பி.மல்லோரி (62). இராணுவ வீரரான இவர், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனத்தில் (சி.ஐ.ஏ.) கடந்த 2012-ஆம் ஆண்டு வரை உளவாளியாக பணிபுரிந்தார்.
அதன் பின்னர் வர்த்தக ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். 5 ஆண்டுகளுக்கு பிறகு இவரது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது.
அதன்பின்னர் இவர் ஒரு சீன இணைய தள நிறுவனத்துடன் தன்னை இணைத்துக்கொண்டார். நாளடைவில் அமெரிக்காவில் இருந்து கொண்டே சீனாவுக்கு உளவு வேலை பார்த்தார். 2 தடவைகள் சீனாவுக்கு சென்று வந்த இவர் , தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் மூலம் சீன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டார்.
அமெரிக்க இராணுவத்தின் மிக உயரியஈரகசியங்களை சீனாவுக்கு விற்பனை செய்தார். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது. மேலும் இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கருத்து தெரிவிக்க