உள்நாட்டு செய்திகள்

வடமேல் மாகாண வன்முறை – தயாசிறியிடம் 3 மணிநேரம் வாக்குமூலம்

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம், பொலிஸார் இன்று மூன்றரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

வடமேல் மாகாணத்தில் கடந்த 13 ஆம் திகதி முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

குருணாகலை, குளியாப்பிட்டியில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலரை விடுதலை செய்வதற்கு தயாசிறி ஜயசேகர முயற்சித்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அத்துடன், சம்பவ இடத்துக்கு வந்திருந்த நாமல் குமாரவுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையிலேயே இன்று கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முன்னிலையாகி, 13 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வாக்குமூலமளித்துள்ளார்.

 

கருத்து தெரிவிக்க