கடந்த அக்டோபர் 20ம் திகதி போபிட்டிய பமுனுகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நுழைந்து தங்க நகையை திருடியதாக இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதற்கிணங்க குறித்த சந்தேக நபர்களை கொடூரமான முறையில் தாக்கியதாக
குற்றம் சுமத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நேற்று முன்தினம் (அக்டோபர் 24) போபிட்டிய பமுனுகம காவல்துறை நிலையத்திற்கு முன்பாக கிராம மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனரென தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதன்காரணமாக பமுனுகம காவல்துறை அதிகாரிகள் மூவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க