உள்நாட்டு செய்திகள்புதியவை

‘அஸாத் சாலி, ஹில்புல்லாவிடமிருந்து பதவிகளை பறிக்கவும்’

கிழக்கு, மேல் ஆகிய மாகாணங்களின் ஆளுநர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர்,

” மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி அடிப்படை வாதத்தை தூண்டும் வகையிலேயே அறிவிப்புகளை விடுத்து வருவதுடன், முஸ்லிம் மக்கள் யுத்தம் செய்ய முன்வரவேண்டும் என்றுகூட  அழைப்பு விடுத்திருந்தார்.

அதேபோல் கிழக்கு மாகாண ஆளுநர் ஹில்புல்லாவும், மத ரீதியிலான சிந்தனைகளை திணிப்பதற்காக தனியார் பல்கலைக்கழகமொன்றை கிழக்கில் ஆரம்பித்துள்ளார். மக்களுக்கு மூளைச்சலவை செய்யும் தொழிற்சாலையாகவே அதனை பார்க்கவேண்டும்.

எனவே, இவர்கள் இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மஹாநாயக்க தேரர்களின் கையொப்பத்துடன் இது சம்பந்தமாக ஜனாதிபதிக்கு கடிதம் கையளிக்கப்படும். இவ்விருவரையும் நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கின்றது. ” என்று கூறினார்.

 

 

 

கருத்து தெரிவிக்க