உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘பயங்கரவாதத்துக்கு சமாதி’ – கொழும்புக்கு நேசக்கரம் நீட்ட டில்லி தயார்!

பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்கு இலங்கைக்கு, இந்தியா முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் தெரிவித்தார்.

கண்டி, தலதா மாளிகைக்கு இன்று ( 17) விஜயம் செய்த இந்திய உயர் ஸ்தானிகர், வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் மஹாநாயக்க தேரர்களை சந்தித்து நல்லாசியும் பெற்றுக்கொண்டார்.

மஹாநாயக்க தேரர்களுடனான சந்திப்பின்போது,  புனித வெசாக் வைபவம் தொடர்பாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் 2017 இல் சர்வதேச வெசாக் தினத்திற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதையும் நினைவு படுத்தினார்.

அதேவேளை, இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக  ஜிகாதி பயங்கரவாதம் எனும் பொதுவான அச்சுறுத்தலைக் கையாள்வதில் இலங்கைக்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பையும் இதன் போது அவர் உறுதிப்படுத்தினார்.

                                      

கருத்து தெரிவிக்க