புதியவைவணிக செய்திகள்

வெங்காய விலை குறித்து விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கை

அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவசாயிகள் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வருடம் பாரிய வெங்காயம் செய்கைகளை மேற்கொண்டிருந்த போதும் அறுவடைக்கான உரிய விலை கிடைக்காததால் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த சந்தை விலை 120 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது வருத்தமளிப்பதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கிணங்க ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு 275 முதல் 300 ரூபாய் வரை வழங்க அரசு பொறுப்புள்ள தரப்பினர் ஏற்பாடு செய்ய வேண்டுமென வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க