புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்

நேற்று (செப்டம்பர் 29) நடைபெற்ற 05வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 309 ரன்களை பெற்றது.

அதையடுத்து 310 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு அவுஸ்திரேலிய அணி களமிறங்கியிருந்தது.

இதனிடையே முன்னதாக இக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை பொறுப்பேற்ற கேப்டன் ஹாரி புரூக் 312 ரன்களை பெற்றிருந்தார். இதன் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரு தரப்பு தொடரில் அதிக ரன்கள் (310 ரன்கள் ) குவித்த கேப்டன் என்ற விராட் கோலியின் மாபெரும் சாதனையை ஹாரி புரூக் (312 ரன்கள்) முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க