2024 ஜூலை மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்கம் தொடர்பாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க ஜூலை மாதம் 2.5 சதவீதமாக இருந்த பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் 1.1 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை மாதம் 2.9 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 2.3 சதவீதமாக பதிவாகியுள்ளதோடு உணவு அல்லாத வகையின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 2.2ஆக இருந்துள்ளதுடன் ஓகஸ்ட் மாதத்தில் 0.2 சதவீதமாக குறைந்துள்ளதென சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க