இதழ்கள்உள்நாட்டு செய்திகள்

‘அமைச்சு பதவியை துறக்கவும்:- றிஷாட்டிடம் கூட்டமைப்பு கோரிக்கை

சுயாதீன விசாரணைகளுக்கு இடமளித்து அமைச்சர் றிஷாட் பதியூதின் தற்காலிகமாக பதவி துறக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, றிஷாட் பதியூதினுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்குமா ?என்று எழுப்பப்ட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

” அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

அந்தப் பிரேரணை விவாதத்துக்கு எடுப்பதற்கு முன்னர் அவர் பதவி துறந்தார். அரசியலில் எதுவும் நடக்கலாம்.

எனவே, அமைச்சர் றிஷாட் பதியூதினும் தற்போதைய சூழ்நிலையில் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பதவி துறப்பதே சிறந்தது என நினைக்கின்றேன்.

ரிசாத் பதியூதீன் குற்றவாளியென நிரூபிக்கப்படும் பட்சத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும்.

எனினும் இது விடயம் குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும்  தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறினார்.

கருத்து தெரிவிக்க