இராஜகிரிய பகுதியிலுள்ள அலுவலக வளாகமொன்றினுள் காலாவதியான விசாக்களின் கீழ் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (ஏப்ரல் 10) கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய பிரஜைகள் நாடுகடத்தப்படும் வரை வெலிசரவிலுள்ள தற்காலிக தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்படுவார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க