அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உதய கம்மன்பில உள்ளிட்ட கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று இன்று முற்பகல் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த, மகிந்த அணியின் 64 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அரசியல் அழுத்தம் பிரயோகித்தமை உட்பட அவருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க