இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும், ராவணா பலய மற்றும் சிங்கலே ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று (16) நடைபெற்றது.
கொழும்பிலுள்ள இ.தொ.கா. தலைமையகமான சௌமிய பவனில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் 21/4 தாக்குதலுக்கு பின்னரான நாட்டு நிலைவரம், பெருந்தோட்டப் பகுதிகளின் பாதுகாப்பு, அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
இ.தொ.காவின் சார்பில் அதன் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில், நிதிச் செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் ஆர். இராஜதுரை, பிரதிப் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், உப தலைவர்களான கா.மாரிமுத்து, பி.சத்திவேல், கருப்பையா கணேசமூர்த்தி ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து தெரிவிக்க