இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க 2024ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக 2024ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான தேசிய கணக்கு மதிப்பீடுகளை வெளியிடும் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் 2024ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் விவசாய நடவடிக்கைகள் 1.7 சதவீதமாகவும் தொழில்துறை பொருளாதார நடவடிக்கைகள் 10.9 சதவீதமாகவும் சேவை பொருளாதார நடவடிக்கைகள் 02.5 சதவீதமாகவும் நேர் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க