அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மஹிந்த ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சுப நேரத்திலேயே கையளிக்கவுள்ளனர்.
குறித்த பிரேரணை நேற்றைய தினமே கையளிக்கப்படவிருந்தது. எனினும், சுபநேரம் கடந்துவிட்டதாலேயே அது கையளிக்கப்படவில்லை என கூட்டு எதிரணி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரையில் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர் என்று செஹான் சேமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையளிப்பதற்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் அவசியமில்லை. அதை நிறைவேற்றுவதற்குதான் சாதாரண பெரும்பான்மை ( 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு) அவசியமாகும்.
கருத்து தெரிவிக்க