இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டமையை சர்வதேச அமைப்பு ஒன்று கண்டித்துள்ளது.
நியூயோர்க்கை தளமாகக்கொண்ட ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
மேஜர் பிரபாத் புலத்வத்தே என்ற இந்த அதிகாரி, 2008ஆம் ஆண்டு ஊடவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் அவர் 2017ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார்.
எனினும் அவர் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவர் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளமை ஊடகவியலாளர் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க