பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இராஜினாமா செய்ததையொட்டி பங்களாதேஷ் மாணவ தலைவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பங்களாதேஷ் பாராளுமன்றம் கடந்த ஓகஸ்ட் 06 கலைக்கப்பட்டது.
அதற்கிணங்க மாணவ குழுக்கள் பங்களாதேஷ் அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனிஸை இடைக்கால தலைவராக நியமிக்க பங்களாதேஷ் அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் பங்களாதேஷின் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று (ஓகஸ்ட் 08) பதவியேற்குமென இராணுவ தளபதி வகார் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க