உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பங்களாதேஷின் இடைக்கால அரச தலைவராக முகமது யூனுஸ் நியமனம்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இராஜினாமா செய்ததையொட்டி பங்களாதேஷ் மாணவ தலைவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பங்களாதேஷ் பாராளுமன்றம் நேற்று (ஓகஸ்ட் 06) கலைக்கப்பட்டது.

அதற்கிணங்க நேற்று மாணவ குழுக்கள் பங்களாதேஷ் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.குறித்த பேச்சுவார்த்தையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனிஸை இடைக்கால தலைவராக நியமிக்க பங்களாதேஷ் அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க