‘கவுண்டம்பாளையம்’ திரைப்படம் நடிகர் ரஞ்சித் இயக்கி, நடித்துள்ளார். இப்படம் பழனிசாமி தயாரிப்பில், விஜி சங்கர் இசையமைப்பில், திருஞானசம்பந்தம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும், இந்த படம் ஆணவ கொலை மற்றும் நாடக காதலை மையப்படுத்தி உருவாகியுள்ளதாகவும், படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே படம் குறித்த சலசலப்பு நிலவி வந்துள்ளது. ‘கவுண்டம்பாளையம்’ திரைப்படம் கடந்த ஜூலை 5ம் திகதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படம் எதிர்வரும் 9ம் திகதி வெளியிடப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க