தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், அத்துரெலிய ரத்தன தேரருக்குமிடையிலான சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளது.
அமைச்சர் றிஷாட் பதியூதினுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ரத்தன தேரர் தீவிரமாக இறங்கியுள்ளார்.
மகாநாயக்க தேரர்களை சந்தித்து தெளிவுபடுத்தியுள்ளதுடன், அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். அதன் ஓர் அங்கமாகவே சம்பந்தனையும் சந்திக்கவுள்ளார்.
இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
கருத்து தெரிவிக்க