இலங்கைக்கு தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும், கருவிகளையும் உடனடியாக வழங்கப்படும் என்று சீன ஜனாதிபதி உறுதியளித்தார்.
இந்த விவகாரங்களில் உதவுவதற்காக இலங்கைக்கு தொழில்நுட்ப குழுவொன்றை விரைவில் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறினார்.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசினார்.
இதன்போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பற்றியும் அதனை அடுத்து இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சீனத் தலைவருக்கு ஜனாதிபதி எடுத்து விளக்கினார்.
சமூக ஊடகங்களின் மூலம் தவறான பரப்புரைகளைச் செய்து, தீவிரவாதத்தைப் பரப்பும, நபர்களை கண்டறிவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவமோ, கருவிகளோ இலங்கையிடம் இல்லை என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே சீன ஜனாதிபதி மேற்கண்ட உறுதிமொழியை வழங்கினார்.
கருத்து தெரிவிக்க