வெளிநாட்டு செய்திகள்

ஈரானுடன் போரிடமாட்டோம் – அமெரிக்கா

ஈரான், அமெரிக்காவுக்கிடையில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

‘ஈரான் ஒரு “சாதாரண நாடாக” நடந்துகொள்ளும் என்று அமெரிக்கா எதிர்ப்பார்க்கின்றது.” என்றும் கூறினார்.

அமெரிக்காவுடன் எந்த போரும் இருக்காது என ஈரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

வளைகுடா பகுதியில் கடந்த வாரம் போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிலை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க