நாடளாவிய ரீதியில் நேற்று இரவு அமுல்செய்யப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டது.
அதேநேரம் கம்பஹா, மற்றும் வடமேல் மாகாணத்தில் அமுல் செய்யப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக குறித்த பிரதேசங்களில் இடம்பெற்ற இனவன்முறைகளை அடுத்தே இந்த ஊரடங்குச்சட்டம் அமுல் செய்யப்படுகிறது.
இந்தநிலையில், வடமேல்மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் இருவர் பலியானதுடன் பாரியளவில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சந்தேகத்தின்பேரில் 60க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் மாசோன் அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவும், ஊழல் எதிர்ப்பு ஜனாதிபதி பிரிவின் பணி;ப்பாளரான நாமல் குமாரவும் அடங்குகின்றனர்.
இந்தநிலையில் சம்பவங்கள் தொடர்பில் மேலும் பலர் கைதுசெய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க