இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதியால் ரன்தொர உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுரிமை பத்திரம் வழங்கி வைப்பு

நேற்று (ஜூலை 17) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ரன்தொர உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் 50,000 கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புக்களில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு உரிமையாளர்களுக்கான இலவசப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் வைபவம் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

அத்தோடு பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் தமது அரசாங்கத்தை நம்பியதன் காரணமாகவே இன்று மக்களுக்கு இலவச காணி உறுதிகளை வழங்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் மேல் மாகாணத்தை சுமார் 50 இலட்சம் மக்கள் வாழும் பெரிய நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க