இன்று (ஜூலை 12) கனடா வான்கூவர் தீவின் மேற்கு கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இந்நிலநடுக்கமானது 6.6 ரிக்டராக பதிவாகிய பின்னர் 6.4ஆக குறைவடைந்துள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் இதுவரை சுனாமி எச்சரிக்கையோ பாதிப்போ ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க