புத்தாண்டை முன்னிட்டு, நாட்டிலுள்ள மதுவரி திணைக்களத்தின் பதிவைப் பெற்ற மதுபான சாலைகளையும் எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14ம் திகதிகளில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு குறித்த தினங்களில் சுற்றுலா அதிகார சபையின் அனுமதி பெற்ற விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் மதுபானம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க