புதியவைவணிக செய்திகள்

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளில் மாற்றம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைத்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 140 ரூபாவிற்கும் ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனி 22 ரூபாவால் குறைக்கப்பட்டு 255 ரூபாவிற்கும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் 3 ரூபாவால் குறைக்கப்பட்டு 217 ரூபாவிற்கும் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 7 ரூபாவால் குறைக்கப்பட்டு 155 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஒரு கிலோ கிராம் நாட்டரிசி 07 ரூபாவால் குறைக்கப்பட்டு 123 ரூபாவிற்கும் ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 265 ரூபாவிற்கும் 425 கிராம் டின் மீன் 25 ரூபாவால் குறைக்கப்பட்டு 395 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க