நேற்று (ஜூலை 10) சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே அணியுடனான 3வது டி 20 கிரிக்கெட் போட்டியில் களமிறங்கியிருந்தது.
அதற்கிணங்க நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடிட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது.இதையடுத்து 183 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6
விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மாத்திரமே எடுத்திருந்தது.
அதனடிப்படையில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இவ்வெற்றியின் மூலம் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் 150வது வெற்றியை இந்திய அணி பதிவுசெய்துள்ளதோடு சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 வெற்றி பெற்ற முதல் அணி என்ற மாபெரும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
கருத்து தெரிவிக்க