இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனுவுக்கு எதிராக பல இடைக்கால மனுக்கள் தாக்கல்

தற்போது திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை பிற்போடுமாறு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்காமல் பிற்போடுமாறும் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதற்கிணங்க தேர்தலை பிற்போடுமாறு கூறி ரஞ்சித் மத்துமபண்டார, விஜித ஹேரத், கலாநிதி ஹரிணி அமரசூரிய, எரங்க குணசேகர ஆகியோர் மனுக்களை முன்வைத்திருந்ததோடு
பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினரும் இடைக்கால மனுவை சமர்ப்பித்திருந்தனர்.

மேலும் ஜனாதிபதி பதவிக் காலம் முடிவடையும் திகதி குறித்து உச்ச நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் வரை தற்போது திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை பிற்போடும் உத்தரவை பிறப்பிக்குமாறு தொழிலதிபர் சமிந்திர தயான் லெனாவா இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கருத்து தெரிவிக்க