புதியவைவணிக செய்திகள்

மட்டக்களப்பில் வெல்வோம் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

வெல்வோம் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டம் இன்று (ஜூன் 29) மட்டக்களப்பில் ஆரம்பமானது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சு ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தினூடாக நாட்டின் பல மாவட்டங்களில் தொழில்வாய்ப்புகள் தொடர்பில் பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு இந்து வித்தியாலய மைதானத்தில் வேலைத்திட்ட நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களின் குடும்பங்களின் நலன்களுக்கென இதனூடாக பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் வெளிநாட்டு தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ளவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன.

கருத்து தெரிவிக்க