1200 கிலோகிராம் போதைப்பொருளஇன்று (ஜூன் 29) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்ட 1208 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் வனாத்தவில்லுவ லெக்டொஸ் தோட்டத்தில் அமைந்துள்ள அதிசக்தி வாய்ந்த போதைப்பொருள் எரியூட்டியை பயன்படுத்தி அழிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 614 கிலோ 36 கிராம் ஐஸ் போதைப்பொருள்,13 கிலோ 686 கிராம் ஹெரோயின்,581 கிலோ 34 கிராம் கெட்டமைன் போதைப்பொருள் புத்தளம் நீதவான், அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் பிரதிநிதிகள், அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளின் மேற்பார்வையில் வனாத்தவில்துவ லெக்டொஸ் தோட்டத்தில் அமைந்துள்ள அதிசக்தி வாய்ந்த போதைப்பொருள் எரியூட்டி மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க