சினிமாபுதியவை

அட்லி இயக்கும் படத்தில் ரஜினி மற்றும் சல்மான்கான்!

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்தில் தற்போது நடித்து வரும் பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப் போகிறார் அட்லி என
தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் ரஜினிகாந்தும் இன்னொரு ஹீரோவாக நடிக்க போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

இப்படத்தில் சல்மான் கானுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவமோ அதை முக்கியத்துவம் ரஜினிக்கும் உள்ளதாகவும் சிக்கந்தர் படத்திற்கு பிறகு இப்படத்தை தொடங்க திட்டமிட்டுள்ள அட்லி, இப்படத்தில் நடிக்க ரஜினியிடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் இப்படத்தில் ரஜினியும் இணைவது உறுதியானால், இந்திய அளவில் ஒரு பிரமாண்ட படமாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க