கெஹெலிய ரம்புக்வெலவிற்கு எதிராக மற்றுமொரு புதிய முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சினால் வழங்கப்பட்ட 2 உத்தியோகபூர்வ வாகனங்களை அமைச்சர் பதவியை இழந்த பின்னும் அரசாங்கத்திற்கு மீள ஒப்படைக்காமல் முறைகேடாக பயன்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல மீது நபரொருவர் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.
அதன் அடிப்படையில் தற்போது கெஹெலிய ரம்புக்வெல மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கருத்து தெரிவிக்க