நேற்று (18) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் 300 அடி பள்ளத்தில் கார் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் மகாராஷ்டிரா மாநிலம் சுளிபஞ்சன் பகுதியை சேர்ந்த 23 வயதான ஸ்வேதா சர்வசே என்ற பெண்ணொருவர்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் அவரது நண்பனிடம் தான் கார் ஓட்டுவதை வீடியோ எடுக்குமாறு கூறி, ரிவர்ஸ் எடுக்க முயன்ற போது திடீரென பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால் கார் மிக வேகமாக பின்னோக்கி சென்று தடுப்புகளை உடைத்து 300 அடி பள்ளத்தில் விழுந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க