தரம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான, இரண்டாம் தவணைக்குரிய கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின. பாடசாலைகளுக்குள்ளும், வளாகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
விசேட பறிசோதனையின் பின்னரே மாணவர்களும், ஆசிரியர்களும் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்று பிரதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர். மே -13 ஆம் திகதி குறித்து பரவிய உறுதிப்படுத்தப்படாத தகவலால் வழமையைவிடவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும், ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது என அதிபர்கள் தெரிவித்தனர்.
10 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே வருகை தந்துள்ளனர். தரம் 1 முதல் 13 வரையான வகுப்புகளை எடுத்துக்கொண்டால் 20 முதல் 25 சதவீதமான மாணவர்கள் வருகை தந்தனர் என கூறப்படுகின்றது.
அதேவேளை, நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் மாணவர்களை, பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. முப்படை தளபதிகளும் மேற்படி கோரிக்கையை விடுத்திருந்தனர்.
6 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகின.
கருத்து தெரிவிக்க