உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

‘அனைத்து தகவல்களையும் அம்பலப்படுத்துவேன்’ – நீதி அமைச்சர்

” தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை உருவாக்கியது யார், அந்த அமைப்புக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்பன உட்பட மேலும் பல தகவல்களை உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவேன்.” – என்று நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் பாதுகாப்பு செயலாளர் ஒருவர் இருந்தார். அவர் தொடர்பில் பல விடயங்கள் குறிப்பிடவேண்டியுள்ளன. எனவே, அவர் அரசியல் களம்புகும்வரைதான் நாமும் காத்திருக்கின்றோம்.தேர்தலில் போட்டியிடும்போது அனைத்து விடயங்களையும் பகிரங்கப்படுத்துவோம்.

நாட்டில் தற்கொலை குண்டுதாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை உருவாக்கியது யார், அந்த அமைப்பு எவ்வாறு செயற்பட்டது, எங்கிருந்து நிதி கிடைத்தது இவை உள்ளிட்ட தகவல்களை உரிய நேரத்தில் வெளிப்படுத்துவோம்.

அதேவேளை, தனது ஆட்சிகாலத்தில் ஊடகங்களை அச்சுறுத்தவில்லை என மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.  உண்மைதான், அவரது காலத்தில் அச்சுறுத்தல் இருக்கவில்லை. ஆனால், ஊடகவியலாளர்கள் திடீரென மாயமானார்கள். அந்த இருண்ட யுகத்துக்கு நாம் முடிவுகட்டியுள்ளோம்.” என்றும் நீதி அமைச்சர் கூறினார்.

கருத்து தெரிவிக்க