உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவான்!

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ருவான் விஜேவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா சென்றிருப்பதாலேயே,  இந்நியனம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அரசின் ஆரம்ப காலகட்டத்தில், ஜனாதிபதி வெளிநாடு செல்லும் போது, பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமித்து வந்தார். எனினும், அண்மைக்காலமாக அவர் பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்காமலேயே வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடைசியாக, அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்த போது, ,ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போது, பதில் பாதுகாப்பு அமைச்சராக யாரும் நியமிக்கப்படாததால்,   பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புச் சபையை கூட்டி முடிவுகளை எடுப்பதற்கு, முப்படைகளின் தளபதிகளும் அதிகாரிகளும் சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை என அமைச்சர் ராஜித குற்றஞ்சாட்டி  இருந்தார்.

அத்துடன், ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதில் பாதுகாப்பு அமைச்சரை நியமித்துவிட்டு ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

கருத்து தெரிவிக்க