புதியவைவிளையாட்டு செய்திகள்

பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி!

இன்று 2024 டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி, 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

கருத்து தெரிவிக்க