சீனாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தென்மேற்கு சீனாவின் ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள நகு நகரின் நைமா கவுண்டியில் இன்று (ஜூன் 01) திடீரெனெ நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 5.9 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுவரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எவ்வித விபரங்களும் வெளியிடப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க